திங்கள், 9 பிப்ரவரி, 2015

பலித்தது, கணிப்பாளர் கணக்கு!

‘அரசியல் விஞ்ஞானி, அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் மிருகம்...’ என்கிறது, அவரது ட்விட்டர் தன் விவரக்குறிப்பு. அவர், யோகேந்திர யாதவ். டில்லித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு, கெஜ்ரிவாலை தவிர்த்த பிற காரணங்களை பட்டியலிட்டுப் பாருங்கள்; அதில், முதலிடத்தில் யோகேந்திர யாதவ் பெயர் இருக்கும்.
தேர்தல் கணிப்பாளராக ஒரு காலத்தில், ‘டிவி’ அரங்குகளில், மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்த தாடிக்காரர் யோகேந்திரா, ஹரியானா மாநிலம், குர்கானை சேர்ந்தவர்.
ஆம் ஆத்மியின் பின்னணியில் இவர் இருக்கும் விஷயத்தை மிகவும் தாமதமாக தெரிந்து கொண்ட முந்தைய காங்கிரஸ் அரசு, பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேற்றியது.
அதைப்பற்றி கவலைப்படாத யோகேந்திரா, ஆம் ஆத்மியில் நீடித்தார். முந்தைய டில்லி சட்டசபை தேர்தலிலும், தொடர்ந்த லோக்சபா தேர்தலிலும், அவரது பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
குர்கான் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு டிபாசிட் இழந்தாலும், தேர்தல் அரசியலில் இருந்து அவர், ஓடிவிடவில்லை. மீண்டும் டில்லி தேர்தலுக்கான திட்டமிடுதலில் களம் இறங்கினார்.
ஒரு சில நாட்களுக்கு முன், ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றிவாய்ப்பு என்று வெளியான செய்திகளைப் பற்றிக்கூறிய அவர், ‘கருத்துக் கணிப்புகள் கூறும் இடங்களைக் காட்டிலும், எங்கள் கட்சி அதிக இடங்கள் பிடிக்கும். 57 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது’ என்றார். இப்போது வெளியாகி வரும் முடிவுகளைப் பார்த்தால், கணிப்பாளரின் கணக்கு பலித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்!

7 கருத்துகள்:

  1. ஆம் ஆத்மி வெற்றி பெறுமென்று தெரியும் ,இவ்வளவு பெரிய வெற்றி பெறுமென்று கணித்த யோகேந்திர .......பாராட்டுக்குரியவரே :)

    பதிலளிநீக்கு
  2. மாற்றம் வரட்டுமே..... பார்ப்போம். நல்லதே நடக்கட்டும் நண்பரே எனது பதிவு
    பாண்டியூர், பாண்டித்துரை Weds பாண்டியம்மாள்.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் வேர்ட்ப்ரஸ் வலைத்தளத்தை இன்று அறிமுகம் செய்திருக்கிறேன், வலைச்சரத்தில். வந்து பாருங்கள், ப்ளீஸ்!
    http://blogintamil.blogspot.in/2015/02/blog-post_11.html

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    எல்லாம்அனுமானங்கள் அனமானங்கள் சரியான விடையை தராது...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. பலருடைய வெற்றிக்குப் பின்னால் இவ்வாறான சிலரின் பங்களிப்புகள் இருக்கின்றன என்பதே உண்மை. இவரைப் பற்றி அறிமுகம் தந்து பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. நல்லது நடந்தால் நல்லதே! மக்கள் எப்போதுமே காத்திருந்து பழக்கப்பட்டவர்கள் தானே....நல்லது நடக்கும் என்று அந்த நாளும் வந்திடாதோ என்று.....இவரைப் பற்றி அறிந்திருக்க வில்லை. தங்களால் அறிந்து கொண்டோம்....எப்போதுமே திரை மறைவில் வெற்றிக்குப் பங்களிப்பவர்கள் பேசப்படுவதில்லை.....மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  7. அன்பு நண்பரே!
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    பதிலளிநீக்கு