வியாழன், 19 டிசம்பர், 2013

குருவிக்கூட்டம் போனதெங்கே?

என் வீட்டு முற்றத்தில்
எதையோ தேடியது சிட்டுக்குருவி!
அழுது திரிந்தபடி
அங்குமிங்கும் ஓடியது
‘அய்யோ அய்யோ’ என்றபடி
அரற்றிப் புலம்பியது
கூடு கட்ட இடம் தேடியதோ?
குஞ்சுக்கு இரை தேடியதோ? 
முல்லைக்கொடி காணோம்!
முயல் ஆடிய கூண்டும் காணோம்!
ஆடு மேய்ந்த வெளியெல்லாம் 
அம்போன்னு கிடக்குறதே!
ஆட்டாங்கல் தண்ணியெல்லாம்
அப்படியே நிக்குறதே!
குடிக்கவே யாருமில்லையோ? 
குருவிக்கூட்டம் போனதெங்கே?
புல்வெளி வாசலிலே
புழு பூச்சி தின்ற குருவி
காரை வாசல் கண்டு
கத்திக்கதறியது!
‘குருவிகளே குருவிகளே’
குரல் கொடுத்துக் கூப்பிட்டது!
வருவார் யாருமில்லை
வேதனையில் நின்ற குருவி 
விருட்டெனவே பறந்தது
சாபம் கீபம் விட்டுடுமோ?
சந்தேகம் வந்ததிப்போ
குருவிக்கு கலரடிச்சு
காதல் பேர்ல விக்குறததும்
கறிக்கடைக்கு வறுவலுக்கு
காசுக்கு விக்குறதும்
ரொம்பவே தப்புத் தப்பு!
திருந்துங்க மக்கு மக்கா!

6 கருத்துகள்:

 1. Followers Gadget பொருத்துங்கள் நண்பரே
  பின் தொடர வசதியாகஇருக்கும்.

  பதிலளிநீக்கு
 2. டெலிஃபோன் டவரால காணாமப் போயிடுச்சுன்னு பார்த்தால், இப்போ எங்கே போயிருக்குன்னு கவிதை மூலம் தெரிஞ்சுகிட்டேன்.

  எல்லா பதிவுகளுக்கும் தலைப்பு கொடுத்து.......நல்லாருக்குங்க !!

  பதிலளிநீக்கு
 3. வாங்க சித்ரா மேடம், உங்கள் ஆலோசனைகளை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் மேடம். வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. ஜெயக்குமார் சார், வருகைக்கு நன்றி. இன்னும் எனக்கு தொழில்நுட்பம் பிடிபடவில்லை. விரைவில் தங்கள் ஆலோசனையை செயல்படுத்தி விடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 5. arumai arumai azhakaga sonnergal enathu illathil anaithu paravaigaluku adaikkalam undu
  nall pathivu

  பதிலளிநீக்கு
 6. அருமை! அருமையான வரிகள்! செல்ஃபோன் டவர்கள்தானே காரணம் என நினைத்திருந்தோம் குருவிகள் காணாமல் போனதற்கு காரணம்? இப்படியுமா? மனிதன் திருந்தவே போவதில்லை...

  பதிலளிநீக்கு